Logo
Logo
Close
  • English
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • எங்களை பற்றி
    • செய்திமடல்கள்
  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு
    • மின் நிலையங்களின் தாக்கம்
    • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) என்றால் என்ன?
    • சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு செயல்பாட்டில் பயன்மிக்க
    • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
    • பிரச்சாரத்தின் கருவிகள் மற்றும் குறிப்புகள்
    • அனல் மின் நிலையம் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு வடிவங்கள்
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
    • புதுப்பிக்கக் கூடிய எரிசக்திக்கு மாறிடுங்கள்
    • இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு
  • இந்தியாவில் அனல் மின் நிலையங்கள்
    • TPP வரைபடம் மற்றும் அடிப்படை விவரங்கள்
  • தேடல்

Search form

Homeசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுபிரச்சாரத்தின் கருவிகள் மற்றும் குறிப்புகள்

பிரச்சாரத்தின் கருவிகள் மற்றும் குறிப்புகள்

 

பிரச்சாரக் கருவிகள் மற்றும் குறிப்புகள்

1.     தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக EIA ஆவணங்களைக் கோரவும்

2.     தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான விண்ணப்பங்களுக்கான முகவரி மற்றும் கட்டணம் செலுத்தும் வகைகள்  

3.     தகவல் அறியும் உரிமைச் சட்டம் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

1.தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக EIAக்கான கோருதல்

நிலை

கோருதலின் பேரில் பொதுமக்களுக்குக் கிடைக்கும் ஆவணம்

திட்டத்தின் திறன் 500 மெ.வா.க்கு அதிகமாக இருந்தால்

திட்டத்தின் திறன் 500 மெ.வா. அல்லது அதற்கு குறைவாக இருந்தால்

 

 

PIO

AA

2வது மேல்முறையீடு

PIO

AA

2வது மேல்முறையீடு

ToR வழங்குவதற்கு முன்னதாக

1. படிவம் 1, திட்டமிடப்பட்ட ToR உள்ளிட்டு

2. முன் செயலாக்க அறிக்கை

3. முன்மொழிபவரிடமிருந்தான கூடுதல் தகவல்கள்

4. SEIAA/ மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்தான SEA/EAC கூட்டத்திற்கான  தேதிக்கான கடிதம்

5. SEAC/EAC கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்புகள்

6. தள வருகை அறிக்கை, SEAC/EACயால் நடத்தப்பட்டால்

SEIAA

SEIAA

CIC

MoEF

MoEF

CIC

ToR வழங்கல் மீது

7. SEIAA/மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் ToR வழங்கப்படுகிறது

பொது ஆலோசனை அறிவிப்பு மீது

8. திட்ட முன்மொழிபவரின் வரைவு EIA

9. முன்மொழிபவரின் வரைவு EIAவின்  செயலாக்க சுருக்கம்

பொது ஆலோசனை நிறைவின் மீது

10. திரட்டப்பட்ட எழுத்துப்பூர்வ மறுமொழிகள்

11. மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுமக்கள் விசாரணை அறிக்கை

12. பொது மக்கள் விசாரணையின் வீடியோ பதிவு

SPCB

SPCB

SIC

SPCB

SPCB

SIC

சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கு / மறுப்பதற்கு முன்னர்

13. முன்மொழிபவரின் இறுதி EIA

14. இறுதி EIA TOR  கடைபிடித்தலில் SEIAA/ MoEF கூர்நோக்குகள்

15. முன்மொழிபவருடனான SEAC/EAC கூட்டத்தின் நிகழ்ச்சி குறிப்புகள்

16. EC by SEAC/ EACயால் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் வழங்கல் / மறுப்புக்கான பரிந்தரைகள்

SEIAA

SEIAA

CIC

MoEF

MoEF

CIC

சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதன் மீது

17. சுற்றுச்சூழல் அனுமதி

18. முன்மொழிபவரின் அறிக்கைகளை கண்காணித்தல்

SEIAA

SEIAA

CIC

MoEF

MoEF

CIC

19. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கைகள்

SPCB

SPCB

SIC

SPCB

SPCB

SIC

2. RTI விண்ணப்பங்களுக்கான முகவரி மற்றும் கட்டணம் செலுத்தும் வகைகள்

எண்

ஆணையம்

முகவரி

ஏற்படுகிற கட்டணம் செலுத்தும் வகை

விண்ணப்ப கட்டணம்

முறையீட்டுக் கட்டணம்[1]

1

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம்

பர்யாவரன் பவன்

CGO காம்பிளக்ஸ், லோதி ரோடு,

புது டெல்லி - 110 003

தொலைபேசி: 11-24362064

ரொக்கம், இந்திய அஞ்சல் ஆணை, கேட்போலை அல்லது காசோலை PAO MOEF புதுடெல்லிக்கு

ரூ 10

ஏதுமில்லை

2

மாநில அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் – ஆந்திர பிரதேசம்

பர்யாவரன் பவன், A-III, இன்டஸ்டிரியல் எஸ்டேட்,

சனத் நகர், ஹைதராபாத் – 500018,

A.P

தொலபேசி: 040-23887594

 

ரொக்கம், இந்திய அஞ்சல் ஆணை

பொது ஆணைம்:

கிராமம்: கட்டணம் இல்லை

மண்டல்: ரூ. 5

மற்றவர்கள்: ரூ. 10

ஏதுமில்லை

3

மாநில அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் – கர்நாடகா

7வது தளம், எம்.எஸ் பில்டிங், 4வது  ஃபேஸ், பெங்களூரூ – 56001. கர்நாடகா

தொலைபேசி: 080-22032497

 

ரொக்கம், இந்திய அஞ்சல் ஆணை

ரூ. 10

ஏதுமில்லை

4

மாநில அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் – கேரளா

பள்ளிமூக்கு, பேட்டா PO, திருவனந்தபுரம் -695024,

கேரளா

தொலைபேசி: 0471-2742264

நீதிமன்ற கட்டண முத்திரை, வங்கியாளர்கள் காசோலை \State Public Information Officer, Department of Environment & Climate Changeக்கு

 

ரூ. 10

ஏதுமில்லை

5

மாநில அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் – தமிழ்நாடு

3வது தளம்,

பனகல் மாளிகை,

எண். 1, ஜீனிஸ் ரோடு,சைதாப்பேட்டை, சென்னை 600015 

தமிழ்நாடு

தொலைபேசி:044-24359974

நீதிமன்ற கட்டண முத்திரை, வரைவோலை

Rs 10

ஏதுமில்லை

 


[1] வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு கட்டணமேதுமில்லை. இந்த நிகழ்வில் விண்ணப்பத்துடன் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ளவர்களுக்கான அட்டையின் நகல் இணைக்கப்பட வேண்டும்.

3.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) என்றால் என்ன?  

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ல் மத்திய மாநில அரசுகளின் செயல்பாட்டில் அதிக வெளிப்படையானத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை கொண்டுவருவதற்காக இயற்றப்பட்டது. அது இந்திய குடிமக்களுக்கு  இரண்டு அரசாங்கங்களின் பொது ஆணையங்களில் இருந்து தகவல்களை அணுகுவதற்கான உரிமைக்கான உத்தரவாதத்தை தருகிறது.

  • பொது ஆணையங்கள் என்றால் யார்?

பொது ஆ ணையங்கள் என்பது  நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டத்தின் மூலமாக, அரசியலமைப்பின் படி உருவாக்கப்பட்ட அனைத்து ஆணையங்கள், அமைப்புகள் மற்றும் சுய அரசு நிறுவனங்களாகும். அது கணிசமான அளவு அரசாங்கத்தினால் உரிமைக் கொள்ளப்படுகிற, கட்டுப்படுத்தப்படுகிற மற்றும் நிதியுதவி செய்யப்படுகிற நிறுவனங்களையும், அரசாங்கத்தால் கணிசமான அளவு நிதிகள் வழங்கப்படுகிற தன்னார்வ அமைப்புகள் அனைத்தையும் உள்ளடக்குகிறது.

  • கோரப்படும் தகவலை வழங்குவதற்கு யார் பொறுப்பாவார்கள்?  

இந்த நோக்கத்திற்காக ஒவ்வொரு  பொது ஆணையத்திலும் நியமிக்கப்பட்டுள்ள, பொது தகவல் அதிகாரி,   தேவைப்படும் தகவல்களை வழங்க வேண்டும். எனவே, தகவல் உரிமை சட்ட விண்ணப்பங்கள் அவரின் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். துணை மாவட்டம் அல்லது துணைப்பிரிவு அளவில்  பொது ஆணையங்களில், ஒரு உதவி  பொது தகவல் அதிகாரி விண்ணப்பங்களையும்/முறையீடுகளையும் பெற்று அவற்றைப் பொது தகவல் அதிகாரிக்கு அனுப்புவதற்காக நியமிக்கப்படுகிறார்.

  • பொது ஆணையத்திற்கு எழுதப்படும் கடிதம் / மனுவில் இருந்து ஒரு தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் எவ்வாறு மாறுபடுகிறது?

தகவலுக்கான ஒரு வழக்கமான கடிதம் / மனு போல் அல்லாமல், தகவல் அறியும் சட்டம் பொது ஆணையத்தை  கோருதலுக்கு பதிலளிக்க காலவரையறை முறையில் வலியுறுத்துகிறது.

குறிப்பிட்டக காலக் கெடுவுக்குள் சரியான தகவலை அளிக்காத அதிகாரியைத் தண்டிப்பதற்கும் சட்டங்கள் உள்ளன, மற்றும்  தேவைப்பட்டால், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க முடியும்.

மேலும், தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, நீங்கள்  பெறக்கூடிய தகவலின் தன்மை, விரிவானது. சட்டத்தினைப் பொறுத்தவரை, நாடாளு மன்றத்தில் மற்றும் சட்டப் பேரவைகளில் அளிக்கப்படும் எந்தவொரு தகவலும்   தகவலறியும் சட்டத்தின் மூலம்   மக்களுக்கு கிடைக்க செய்யப்படுகிறது.

ஏதேனும் தகவலைக்கோரும் எந்தவொரு நபரும் தகவலைக் கோருவதற்கான காரணத்தைத் தெரிவிக்கவேண்டியதில்லை, அவர் அவரது தொடர்பு முகவரியைத் தவிர எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் பகிர்ந்துகொள்ளவேண்டியதில்லை

  •  தகவலறியும் சட்ட விண்ணப்பத்திற்கான வார்த்தை வரம்பு உள்ளதா?

ஆம்! அது ஐநூறு வார்த்தைகளுக்கு மிகக்கூடாது, அது மத்திய  பொது தகவல் அதிகாரியின் முகவரி மற்றும் விண்ணப்பதாரரின் முகவரியையும் உள்ளடக்கும். ஆனால் பிற் சேர்க்கைகளை உள்ளடக்காது.

500 வார்த்தைகளுக்கு மிஞ்சியிருப்பதனால் உங்கள் தகவலுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட  மாட்டாது.

  • தகவலைப் பெறுவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நான் என்ன செய்யவேண்டும்?

ஒரு நிலையான கட்டணத்துடன்,  சம்பந்தப்பட்ட போது ஆணையத்துக்கு நீங்கள் விரும்பும் தகவலைக் கோரும் ஒரு கடிதம் எழுதப்பட வேண்டும். கோரிக்கைக் கடிதம் சம்பந்தப்பட்டப் பொது ஆணையத்தின்  பொதுத் தகவல் அதிகாரியின் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டக் கோருதல்களை பெறவதற்கும் செயல்முறைப்படுத்துவதற்குமான  பொறுப்புத் தரப்பட்டுள்ள அதிகாரி அவர் தான். இந்த நோக்கத்திற்காக  பொது தலைமை அதிகாரியின் பெயர் தேவையில்லை. விண்ணப்பமானது   பொதுத் தகவல் அதிகாரி என்று மட்டும் முகவரி எழுதப்பட்டால் போதுமானது. உங்களால் கடிதம் எழுத முடியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட  பொது தகவல் அதிகாரி விண்ணப்பத்தை எழுதுவதற்கு உங்களுக்கு உதவ வேண்டும்.

  • தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி என்ன பெறலாம்?  

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், நீங்கள் பின்வரும் எதையும் பெறலாம்:

  • ஆவணங்கள், பதிவுகள், குறிப்பாணைகள், மின்னஞ்சல்கள், கருத்துகள், ஆலோசனைகள், பத்திரிக்கை வெளியீடுகள், பதிவுப் புத்தகங்கள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், பேப்பர்கள், சுற்றறிக்கைகள், மாதிரிகள், உரு மாதிரிகள்
  • மின்னணுப் படிவத்திலிருக்கும் புள்ளிவிவரம், ஏதேனும் ஆவணத்தின் தொலைநகல் பிரதி
  • நுண்படச்சுருள்,  அல்லது நுண்படச்சுருளின் படங்களின் நகல்கள்
  •  தகவலறியும் உரிமையைப் பயன்படுத்தி என்ன தகவல்கள் பெற முடியாது?

பெற முடியாத தகவல்கள் உள்ளடக்குபவை :

1.     இந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையை யும் பாதிக்கக்கூடிய ஒனறை

2.     இந்தியாவின் பாதுகாப்பு, உத்தி, அறிவியல் மற்றும்  பொருளாதார நலன்கள் தொடர்பான அல்லது வெளிநாட்டு உறவு அல்லது வன்முறையைத் தூண்டக்கூடிய ஒன்று

3.     எந்தவொரு நீதிமன்றம், சட்டம் அல்லது தீர்ப்பாயத்தால்   வெளியிடுவதற்கு தடை செய்யப்பட்ட ஒன்று

4.     ஒன்றன் வெளியீடு நீதி மன்றத்தினை அவமதிப்பதாக இருப்பது

5.     ஒன்றன் வெளியீடு நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் சிறப்புரிமையை மீறுவதாக இருப்பது

6.     வணிக இரகசியம் அல்லது அறிவார்ந்த சொத்தினை உள்ளடக்கிய ஒன்றை,  அதன் வெளியீடு மூன்றாம் தரப்பின் போட்டி நிலைக்கு ஊறு  விளைவிக்கூடும் என்பதால், இந்த வெளியீடு பொது நலனுக்கு பெரிய அளவு சேவையாற்றும் என்றால் தவிர

7.     ஒரு மனிதனுக்கு அவனது நம்பிக்கைகு பாத்திரமாகும் உறவுக்கும் கிடைக்கும் ஒன்று, அது பொது நலனுக்கு சேவையாற்றும் என்றால் தவிர

8.     வெளிநாட்டு அரசாங்கத்திடம் இருந்து நம்பிக்கையை பெறும் ஒன்றை

9.     ஒன்றன் வெளியீடு எந்தவொரு மனிதரின் உயிருக்கு அல்லது பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்குமானால்

10.   விசாரணை செயல்முறைக்கு அல்லது மதிப்பீட்டுக்கு அல்லது குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர்வதற்கு தடையாக இருக்கக்கூடிய ஒன்று

11.   முடிவுகள் மீதான மந்திரிசபை ஆவணங்கள் அந்த முடிவுகள் பொதுமக்களுக்கு கிடைக்கப் பெறும் வரை

12.   எந்தவொரு  பொது நடவடிக்கை அல்லது நலனுக்குதொடர்பில்லாத தனிப்பட்டத் தகவல்கள், அல்லது அந்தரங்கத்தில் த லையிடுவதாக இருப்பது.

  •  தகவல்களை நான் எந்த மொழியில் கேட்கலாம்?

தகவல்கள் ஆங்கிலம், இந்தி அல்லது விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும் பிராந்தியத்தின் அதிகாரப்பூர்வ மொழியில் கோரப்படலாம்.

  • தேவைப்படும் தகவலை எவ்வாறு நான் பார்க்க / நகலாக்க முடியும்?  

தகவலறியும் உரிமைச்சட்டம் குறிப்பிடுவது என்னவென்றால் நீங்கள்:

  •   தேவையான ஆவணங்கள், கைபிரதிகள் அல்லது பதிவுகளை ஆய்வு செய்யலாம்
  • குறிப்புகள், சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் நகல்கள் அல்லது அவற்றின் சாரத்திலிருந்து நகல்கள் எடுக்கலாம்
  •  பொருட்களின் சான்றளிக்கப்பட்ட மாதிரிகளை எடுக்கலாம்
  • CDகள், ஃபிளாப்பிகள், டேப்புகள், வீடியோகேசட்டுகள், அச்சுப் பிரதிகளை (கம்ப்யூட்டர் தகவல்கள்சேமிக்கப்பட்டிருந்தால்) அல்லது ஏதேனும் மின்னணு முறையில்
  • ஆணையங்கள் எவ்வாறு கோரப்பட்ட தகவல்களை தரவேண்டும்?  

நீங்கள் கோரும் தகவல் நீங்கள் விரும்பும் வடிவத்தில் தரப்பட வேண்டும், அது பொது ஆணையத்தின் வளங்களை அளவுக்கு அதிகமாக மாற்றாத வகையில். அல்லது அது நீங்கள் கேட்கும் வடிவில் வழங்குவது பதிவின் பாதுகாப்பினை அழிப்பதாக இருக்காத வகையில்.

  • தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கோருவதற்கான ஒரு வார்ப்புரு இருக்கிறதா?  

இல்லை! தகவலறியும் உரிமை சட்டத்தின் விண்ணப்பத்திற்கான குறிப்பிட்ட வடிவம் ஏதுமில்லை. ஆனால் விண்ணப்பதாரர் பின்வரும் விவரங்களை உள்ளடக்க வேண்டும்:

  • விண்ணப்ப தேதி
  • சம்பந்தப்பட்ட பொது தகவல் அதிகாரியின் முகவரி
  • விண்ணப்பதாரர் முகவரி
  • கோரப்படும் தகவல் (அது எண்ணிடப்பட்ட வடிவில் அல்லது அட்டவணை வடிவில் கேட்பது அறிவுறுத்தத்Iதக்கதாகும் அதனால் அதே வகையில் பதில் தரப்படும்)
  • தகவல் எந்த வடிவத்தில் வேண்டும்- அச்சுப் பிரதி, சிடி, மின்னஞ்சல்
  • கட்டணத்தை ஒட்டவும் / இணைக்கவும்
  • கட்டணம் செலுத்தும்வகையைக் குறிப்பிடவும்
  • கையொப்பம்

பல்வேறு மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு ஆணையங்கள் தகவலறியும் உரிமைக் கோருதல்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட மாதிரி வடிவங்களைக்  கொண்டிருக்கின்றன. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்துக்கான வடிவம் இங்கே : http://envfor.nic.in/sites/default/files/app_pro.pdf

மத்திய தகவல் ஆணையமும் ஒரு  முறையீட்டு வடிவத்தை  கொண்டிருக்கிறது. எனினும், அதைப் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமல்ல மற்றும் அந்த காரணத்துக்காக விண்ணப்பம் நிராக்கரிக்கப்படவோ/ தகவல் மறுக்கப்படவோ மாட்டாது.

  • ஆன்லைனில் தகவலறியும் உரிமைக்கோருதலைத் தாக்கல் செய்யலாமா?  

சம்பந்தப்பட்ட பொது ஆணையத்தைப் பொறுத்தது அது.  மத்திய அரசாங்கம் சமீபத்தில் ஆன்லைன் தகவலறியும் உரிமைக்கான இணையத்தை துவங்கியுள்ளது http://rtionline.gov.in/

 தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சகங்களில் தகவலறியும் உரிமைக் கோருதலை செய்ய இது உங்களை அனுமதிக்கும்.

இதற்கான ஒரு வலைதளத்தை துவங்கும் செயல்முறையில் சில மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன.

  •  ஒரு மறுமொழியைப் பெறுவதற்கான கால அளவு என்ன?

 கோரப்படும் தகவல் ஒரு நபரின் உயிர் மற்றும் சுதந்திரம் சம்பந்தப்பட்டதாக இருந்தால், கோரப்பட்ட தகவல் 48 மணிநேரத்தில் தரப்படும்.

தகவலறியும் உரிமைக் கோருதல் பெற்ற 30 நாட்களுக்குள் பொது தகவல் அதிகாரி தகவலை வழங்க வேண்டும்.

விண்ணப்பம் ஒரு உதவி  பொது தகவல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், பதில் அளிப்பதற்கு கூடுதலாக 5 நாட்கள் எடுத்துக்கொள்ளும்.

கோரப்பட்ட தகவல் ஒரு நபரின் உயிர் அல்லது சுதந்திரம் சம்பந்தப்பட்டதாக இருந்தால், கோரப்பட்ட தகவல் 48 மணி நேரங்களில் வழங்கப்படும்.

  • உரிய பொது ஆணையத்திற்கு விலாசம் குறிப்பிடப்படாததால் ஒரு தகவலறியும் உரிமை விண்ணப்பம் திருப்பி அனுப்பப்படுமா?  

இல்லை! சட்டத்தின் கீழ், தகவல் கோரப்பட்டு முகவரிக் குறிப்பிடப்பட்டபொதுத் தகவல் அதிகாரி அந்த கோரிக்கையை உரிய பொது தகவல் அதிகாரிக்கு , கோரிக்கையைப் பெற்ற ஐந்து நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

  •  தகவலைபெறுவதற்காக நான் கட்டணம் செலுத்த வேண்டுமா?

ஆம்! மாநில அரசு தகவல்களை வழங்குவதற்காக மாநிலத்தின் பொது அதிகாரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை முடிவு செய்யும். மத்திய அரசு ஒரு விண்ணப்பத்துக்கு ரூ. 10ஐ கட்டணமாக அறிவித்துள்ளது. தயவுசெய்து அட்டவணை 2ஐ (மேலே) வெவ்வேறு மாநில அரசாங்கங்கள் விதிக்கும் கட்டணங்களுக்காகவும் அவை எவ்வாறு செலுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் சரி பார்க்கவும்.

உங்கள் தகவலறியும் உரிமைக் கோரிக்கையை அனுப்புவதற்கு முன்னால் அதன் ஒரு நகலை உங்களிடம் வைத்திருக்கும்! தகவலறியும் உரிமைக் கோரிக்கைகளை பதிவு செய்யப்பட்ட தபாலில் ஒப்புகை சீட்டுடன் அனுப்பவும். 

நீங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளதற்கான அட்டையை  வைத்திருந்தால், நீங்கள் தகவலறியும் உரிமைக்கான கட்டணத்தை செலுத்த தேவையில்லை., மற்றும் தகவலுக்கான கோரிக்கையுடன் அந்த அட்டையின் ஒரு பிரதியை நீங்கள் அனுப்பவேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் தவிர, பொது ஆணையம் அச்சு அல்லது மின்னணு வடிவங்களில் தகவல்களை வழங்குவதற்காகவும் கட்டணங்களை விதிக்கலாம். அது தரவின் அளவினைப் பொறுத்ததாகும். வழக்கமாக, பல்வேறு பக்கங்களுடையதாக இருக்கும் தகவல்களுக்கு பிரதி பக்கத்திற்கு ரூ. 2 விதிக்கப்படலாம். ஏதேனும் கூடுதல் கட்டணங்கள் தேவைப்பட்டால் அதை பொது தகவல் அதிகாரி தனது பதில் விவரிப்பார்.

30 நாட்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தகவல் வழங்கப்படவில்லை என்றால், தகவல் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

  • எனது தகவலறியும் உரிமைக் கோரலுக்கான பதில் ஏதுமில்லை என்றால் என்ன செய்வது?  

நீங்கள் ஒரு மேல்முறையீட்டினை விரும்ப வேண்டும். இந்த மேல்முறையீட்டை நீங்கள் மேல்முறையீட்டு ஆணையத்தில் செய்யவேண்டும், ஒவ்வொரு பொது ஆணையத்திற்கான தகவலறியும் உரிமை மேல்முறையீட்டு  செயல்முறையின் செய்வதற்கான வேலை அவர்களுடையது. உங்கள் விண்ணப்பத்திற்கான பதிலை நீங்கள் பெற்றதிலிருந்து 30 நாட்களுக்குள் செய்யவேண்டும், அதாவது உங்கள் தகவலறியும் உரிமை விண்ணப்பம் பொது ஆணையத்திடம்  சென்றடைந்த 30 மற்றும் 60 நாட்களுக்கு இடையில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

  • பெற்றத் தகவல் தவறானது / முழுமையற்றது என்றால் என்ன செய்வது?

நீங்கள் மேல்முறையீட்டு ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம். பதில் பெற்ற  30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். தாமதத்திற்கு ஒரு நியாயமான காரணம் இருக்குமானால், அனுமதிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகும் மேல்முறையீடு செய்யப்படலாம்.

  • தகவல் எனக்கு மறுக்கப்படலாமா?

ஆம்! குறிப்பிட்ட தகவல்களை  தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பகிர்ந்து கொள்ள முடியாது. அத்தகைய நிகழ்வில், தகவல் மறுக்கப்படலாம். தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் அணுகக் கூடியது என்று நீங்கள் கருதினால், மறுப்பதற்கு எதிராக நீங்கள் மேல்முறையிடு  செய்ய முடியும்.

பதில் பெற்ற 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டு ஆணையத்திடம் இந்த முறையீட்டினை  நீங்கள் செய்யலாம்.

நீங்கள் கோரிய தகவலை பொது தகவல் அதிகாரி நிராகரித்தால், நிராகரித்தற்கான காரணம், நிராகரிப்புக்கு எதிராக எவ்வாறு மேல்முறையீடு செய்யலாம் மற்றும் மேல்முறையீடு  செய்வதற்கான மேல்முறையீட்டு ஆணையம் அவரது பதிலில் குறிப்பிடப்பட வேண்டும்.

  • மேல்முறையீட்டு ஆணையத்தின் பதிலில் நான் திருப்தியடையவில்லை என்றால் என்ன செய்வது?  

இந்த நிலையில், நீங்கள் இரண்டாவது மேல்முறையீட்டினை சம்பந்தப்பட்ட மத்திய / மாநில தகவல் ஆணையத்தில்  செய்யலாம். தகவலறியும் உரிமை மேல் முறையீட்டுக்கான காலம் காலவதியாவதிலிருந்து 90 நாட்களுக்குள், தாக்கல் செய்யப்பட வேண்டும். தாமதத்திற்கான  செல்லுப்படியாகிற காரணம் அளிக்கப்பட்டால், இந்த காலத்திற்குப் பிறகும் மேல்முறையீடுகள் ஏற்கப்படலாம்.

  •  ஒரு கால வரம்புக்குள் ஒரு உத்தரவைப் பிறப்பிக்க SIC/CIC கட்டுபட்டுள்ளதா?

இல்லை, SIC/CIC ஆணைக்கு கால வரம்பேதுமில்லை

  • ஒரு அதிகாரி கோரிய தகவலை வழங்கவில்லை என்றால் என்னவாகும்?  

CIC/ SIC பொதுத் தகவல் அதிகாரி  இவ்வாறு இருப்பதாக கண்டறிந்தல்

  • நியாயமற்ற முறையில் தகவலறியும் உரிமைக் கோரிக்கையை பெற மறுப்பது
  • நியாயமற்ற வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள் தர மறுப்பது
  • தாமதமான தகவல்
  • வேண்டுமென்றதே தவறான, நிறைவற்ற, தவறாக வழிநடத்துக்கிற தகவல்களை தருவது
  • கோரிய தகவல்களை அழிப்பது
  • எந்தவகையிலாவது தகவல்கள் வழங்குவதைத் தடுப்பது

அது தினசரி ரூ. 250ஐ பொது தகவல் அதிகாரிக்கு அவர் விண்ணப்பத்தை பெறும் நாளில் இருந்து அல்லது தகவலை வழங்கும் நாள் வரை, நிகழ்வின்படி விதிக்கப்படலாம். அதிகபட்ச அபராதமாக ரூ. 25,000 விதிக்கப்படலாம். 

Tamil
  • English
  • ಕನ್ನಡ
  • മലയാളം

Download Handbook

You can download Thermal Watch Handbook in Four different languages

 

  • English
  • Kannada
  • Tamil
  • Telugu
  • Hindi

Recent Posts

கடலூர் ITPCL அனல் மின் நிலைய சுற்றுச்சூழல் அனுமதிக்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பற்றிய கருத்துகள்
Namati - Ground Truthing
அனல் அடிப்படைகள்
«Éø Á¢ý¿¢¨ÄÂõ ÌÈ¢ò¾ ¾¸Åø ¨¸§ÂÎ
அனல் மின் நிலையம் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வடிவங்கள்

Contact Info

அலுவலகம்: புதிய எண் #246 (பழைய எண் #277B), டீடீகே சாலை(ஜெ.ஜெ. சாலை), ஆள்வார்பேட்டை சென்னை தமிழ்நாடு 600018 இந்தியா

தொலைபேசி: +91-44-24660387

தொலைநகல்: +91-44-24994458

மின்னஞ்சல்: tpp@cag.org.in

Contact

Drupal development company : Red Crackle
  • Follow:
Log in

or
Login via facebook
Login via twitter